மொழிபெயர்ப்புக் கவிதைகள்

சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் (கவிதைகள்)
தமிழில்: கால சுப்ரமணியம்
விலை ரூ.70/- Order Now

தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன.

கால சுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளும் கவிஞருக்கு மிகுந்த விசுவாசமாக இருப்பவர். கவிதைகளை மிக நெருக்கமாக அறிந்த பிறகே அவற்றைப் பொருட்சிதறல் இல்லாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை அடுத்து வரும் கவிதைப் பக்கங்கள் உறுதி கூறும். புகழ் மிக்க போதலேர் கவிதைகளும், கிறித்துவுக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கிரேக்கக் கவி பல வகைகளில் முதல்வி என்று சொல்லத்தகும் ஸாப்போவின் கவிதைகளும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள் ஆகும்.

சூரியன் தகித்த நிறம் (கவிதைகள்)
தமிழில்: பிரமிள்
விலை ரூ.70 Order Now

தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்திய ரிக்வேதம், உபநிஷதம் தொடங்கி பாப்லோ நெருடா, எஸ்ரா பவுண்ட், பிரெக்ட், கலீல் கிப்ரான், ஜோஸப் பிராட்ஸ்கி முதலான பல உலக இலக்கியத்தின் முக்கியமான கவிஞர்களின் வரிகளை நேர்த்தியாகவும் வாசிப்புச் சுலபத்தன்மையோடும் இனிமை சார்ந்த செறிவோடும் தமிழில் தந்துள்ளார்.

உலக இலக்கிய உச்சம் எனத்தக்க ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘பாதை’ கவிதை இத்தொகுதி யின் சிறப்பம்சம். பிரமிளுக்கு இயல்பாக அமைந்த கவித்துவத்தோடு அவரது ஆன்மிகத் தேடலும் வெளிப்படும் விதமாகக் கவிதைத் தேர்வுகள் அமைந்துள்ளதை வாசகர்கள் இத்தொகுப்பில் உணரலாம்.