சிறுகதைகள்

திருச்செங்கோடு
பெருமாள் முருகன்
விலை ரூ.125 Order Now

கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை? சரிவின் கோடியில் பூக்களால் பொலியும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள்? முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்...

‘பயமே வேண்டாம். தெகிரியமா ஒரு சுத்து வந்திரு போதும். கல்லு வவுறெல்லாங்கூட இந்த வேண்டுதலுக்கப்புறம் தொறந்திருக்குது.’

அவள் முகத்தில் இப்போது கண்ணீரில்லை. சிரிக்கிறாள். தலையைக் கோதிக்கொண்டே சிரிக்கிறாள். அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள். புஷ்பக விமானம் இறக்கை விரித்துக்கொண்டு நிற்கிறது.

- நூலிலிருந்து...
தக்கையின் மீது நான்கு கண்கள்
சா. கந்தசாமி
விலை ரூ.100 Order Now

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி 'தக்கையின் மீது நான்கு கண்கள்'. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள்.

என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.

- சா. கந்தசாமி
காந்தி
அசோகமித்திரன்
விலை ரூ.300 Order Now

எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்-துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்ளாதவர். ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக்கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள்கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக்கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர். தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் மாற்றம்கொள்ளக் கூடியவன் உயரக்கூடியவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப் படுத்தத் தயங்காதவர். இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது...

- நூலிலிருந்து...
அக்கா
அ. முத்துலிங்கம்
விலை ரூ.90 Order Now

சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான்.

- அ. முத்துலிங்கம்
எஸ்தர்
வண்ணநிலவன்
விலை ரூ.90 Order Now

1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார்.

அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது...

எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது.

- வண்ணநிலவன்
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
நாஞ்சில் நாடன்
விலை ரூ.90 Order Now

திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய 'இவன்தான் பாலா' என்று 'ஆனந்த விகடன்' வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான 'இடலாக்குடி ராசா'வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை...

33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது.

- நாஞ்சில் நாடன்
புதிய வாசல்
தொகுப்பும் அறிமுகமும்: ஜெயமோகன்
விலை ரூ.150 Order Now

இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதிய வர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளை தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன். காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்டிருந்தார். சட்டென்று எவராலும் சொல்லமுடியவில்லை. சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால், சென்ற சில வருடங் களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக் கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால், சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது.கலைசார்ந்த ஒட்டுமொத்தமான ஒரு விவாதச்சூழலே கலைகளை உருவாக்க முடியும். ஒரே தரத்திலான வேகம் கொண்ட ஐம்பதுபேர் இருந்தால் போதும் இலக்கியம் வாழும், வளரும். அந்த எண்ணிக்கைகூட இன்றிருக்கிறதா என்ற ஆழமான ஐயம் எனக்கு உள்ளது. இச்சூழலில் நான் தேர்ந்தெடுத்த இக்கதைகள் நம்பிக்கைக்கான முகாந்திரமாக அமைகின்றன.

- ஜெயமோகன்
வெளியில் ஒருவன்
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.80 Order Now

முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதை போன்றது, நானும் வளர்ந்திருக் கிறேன், எனது எழுத்தும் வளர்ந்திருக்கிறது, இந்த மாற்றங் களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, முதல்தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்தது, ஆனால் புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரியவரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது, அந்த வகையில் நான் பாக்கியசாலி, இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்து வைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது.

- எஸ். ராமகிருஷ்ணன்
கடைத்தெருக் கதைகள்
ஆ. மாதவன்
விலை ரூ.130 Order Now

திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயிலில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் 'சாலைக் கம்போளம்' ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி. இங்கே பரபரப்பான வியாபார சந்தடிகளின் பின்னே உயிர்ததும்பும் வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கண்டு, கேட்டு, உணர்ந்து பழக்கப்பட்டவர் கதாசிரியர். அதனால்தான் சாலைக் -கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித்திரங்களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் சித்தரிக்க அவரால் முடிகிறது./p>

நுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றிருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன.

இரா. இளஞ்சேரன்
நாளைக்கும் வரும் கிளிகள்
பிரபஞ்சன்
விலை ரூ.140 Order Now

பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது.

இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.

தபால்காரர் பெண்டாட்டி
பிரபஞ்சன்
விலை ரூ.180 Order Now

தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.

அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார்.

ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.

- பிரபஞ்சன்
மரி என்கிற ஆட்டுக்குட்டி
பிரபஞ்சன்
விலை ரூ.170 Order Now

மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள்.

குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.

- பிரபஞ்சன்
ருசி
பிரபஞ்சன்
விலை ரூ.180 Order Now

பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.

- பிரபஞ்சன்
அப்பாவின் வேஷ்டி
பிரபஞ்சன்
விலை ரூ.200 Order Now

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர்.

- பிரபஞ்சன்
மீன்கள்
தெளிவத்தை ஜோசப்
தொகுப்பாசிரியர்: ஜெயமோகன்
விலை ரூ.100 Order Now

இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாகச் சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப் பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.பலகோணங்களில் திறக்கும் ஒன்பது முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படிப் போராடினர், எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு.

- ஜெயமோகன்
அப்பாவின் சிநேகிதர்
அசோகமித்திரன்
விலை ரூ.180 Order Now

தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் படைப்பு களில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்பு களில் இடம்பெறுமா? இப்படைப்புகளே சுயசரிதைதானோ?இதற்கு ஆமாம் & இல்லை என்று ஒரு சொல்லில் பதில் தந்துவிட முடிவ தில்லை. Òஎங்கள் பக்கம் இல்லை என்றால் நீங்கள் எதிரிப் பக்கம்Ó என்று குழுக்களாக இயங்குபவர்கள் நிலைமையை எளிமைப்படுத்திவிடலாம், ஆனால், யதார்த்தம் எளிமையானதல்ல. இத்தொகுதியிலுள்ள பல கதை களின் பல பாத்திரங்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஆதார மனிதர்கள் உண்டு. ஆனால், இக்கதைகள் அந்த மனிதர்களின் கதைகளல்ல. இந்த அளவுக்கு நான் சொல்ல முடியும்¢; இவர்களை நான் அறிவேன்; இவர் களுக்கு நன்றி செலுத்துவதும் என் கதைகளின் ஒரு நோக்கம் ஆகும். இக் கதைகளை மிகுந்த பிரயாசைப்பட்டுத்தான் நான் எழுதினேன் என்றாலும், இக்கதைகளை எழுதியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு.

- அசோகமித்திரன்
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
பிரபஞ்சன்
விலை ரூ.130 Order Now

எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம்.

பிரபஞ்சன்
ரம்பையும் நாச்சியாரும்
சா. கந்தசாமி
விலை ரூ.100/- Order Now

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்

இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.

ரம்பையும் நாச்சியாரும்
சா. கந்தசாமி
விலை ரூ.100/- Order Now

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்

இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.

ஊமைச் செந்நாய்
ஜெயமோகன்
விலை ரூ.160 Order Now

ஒரு புனைவுக்கான களத்தை ஆர்வம் காரணமாக அறியவேண்டுமே ஒழிய ஆராய்ச்சி செய்யக்கூடாதென்பதே என் கொள்கை. எழுதும்போது தகவல்களைச் சொல்லும் நினைவு என்பது கற்பனையை குறுக்கும் இரும்புத்தளை. படைப்பு என்பது எனக்கு ஒரு பெரிய விழிப்புநிலை கனவுதான். கனவுபோலவே நான் அறிந்தவை என் அச்சங்கள் ஆவல்களுடன் கலந்து இன்னொன்றாக படைப்பில் இருக்கும். நானே அதை வாசித்து வியப்பேன்.

ஆகவே படைப்பில் உள்ள பிழைகள் எல்லாமே படைப்பின் பகுதி என்றே நான் எண்ணுவேன். நாகர்கோயில் மணிமேடைக்கு அருகே ஏரி உள்ளது என நான் எழுதினால் அது என்னைப் பொறுத்தவரை பிழை அல்ல. உண்மையில் ஏரி இல்லை என்பது யதார்த்தம். என் கதையில் ஏரி உள்ளது என்பது புனைவுயதார்த்தம். ஏன் அந்தப் பிழை அங்கே நிகழ்ந்தது என்றுதான் வாசகன் யோசிப்பான். என் கனவுக்குள் அறிவார்ந்த முறையில் நுழைய அவனுக்கு அது நல்ல வழி.

- ஜெயமோகன்
அந்தக் கதவு மூடப்படுவதில்லை
பிரபஞ்சன்
விலை ரூ.140/- Order Now

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.

இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்.

மனித குலத்தின் மேல் அவருக்குள்ள நம்பிக்கை, முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டுள்ள தத்துவங்களைச் சார்ந்திராமல், அனுபவங்கள் தந்த வாழ்க்கைச் சாரத்திலும் இயல்பில் மனிதர் களின் நல்ல தன்மையிலும் நிலைகொண்டுள்ளன. சந்தர்ப்பம் என்கிற நிர்ணயிக்கப்பட்ட சதுரத்துக்குள் சுற்றிவரவே நிர்ப்பந்திக்கப்பட்ட மனித வாழ்வின் அபத்தத்தையும் நிர்க்கதியையும் சொல்வன பிரபஞ்சனின் கதைகள்.

ஆறுமுகசாமியின் ஆடுகள்
சா. கந்தசாமி
விலை ரூ.220/- Order Now

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது.

இத்தொகுப்பில் சா. கந்தசாமியின் தொடக்க காலக் கதைகளில் ஒன்றான புகழ்பெற்ற ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை முதல் அண்மைக் காலத்துக் கதைகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் சா.க.வின் கதைகள், சற்றுக் கூர்மையான நோக்கில் ஆழங்களையும் நுணுக்கங்களையும் நோக்கிச் சத்தம் இல்லாமல் அழைத்துச் செல்பவை. சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஊடாகப் பொதிந்தும் புலப்படாமலும் இருக்கும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விளம்புபவை சா.கந்தசாமியின் கதைகள்

தமிழ் மொழியின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் சா.கந்தசாமி முன்னணியில் இருப்பவர் என்பதை அழுத்தமாகச் சொல்பவை இந்தத் தொகுப்புக் கதைகள்.

நண்பனின் தந்தை
அசோகமித்திரன்
விலை ரூ.110/- Order Now

அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற ‘பம்பாய் 1944’, ‘லீவு லெட்டர்’ ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அருமையான படைப்புகள். சிறுகதைகளில் எள்ளல், ஏளனம் இல்லாத நகைச்சுவை அசோகமித்திரனின் பாங்கு. அது இப்போதும் அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. சிறிய தொகுப்பாக இருந்தாலும் மனிதர்களின் இயல்புகளைப் பெருமளவு திறந்து காட்டுகிறது!