நாவல்கள்

நீலம் (பேப்பர் பேக்)
ஜெயமோகன்
விலை ரூ.250 Order Now

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை.

கம்சனும் ராதை அளவுக்கே கிருஷ்ணனை எண்ணிக்கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இரு வழிகளையும் இருவகை யோகமரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந் நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்றும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர் களுக்காக முன்வைக்கிறது.

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

- ஜெயமோகன்
பெரும் மழை நாட்கள்
சா. கந்தசாமி
விலை ரூ.160 Order Now

பெரும் மழை நாட்கள்Õ நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் & வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப் பாளன்கூட & எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடி யாது. எழுதியது எழுதப்பட்டுவிட்டது. அது மாதிரி இன் னொன்று எழுதுவது இயலாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று.

- சா. கந்தசாமி
ஏழாம் உலகம்
ஜெயமோகன்

ஒரு கனவு வழியாக ராமப்பனின் முகம் என்னுள் மீண்டபோது எழுந்த உத்வேகம் இந்நாவலை எழுத வைத்தது. இது ஒருவகை விடுதலை முயற்சி. என்னை அச்சுறுத்தி அருவருப்பூட்டிய ஓர் உலகு. இதன்மூலம் நானும் வாழும் உலகமாக ஆகிறது.

முதற்கனல்
ஜெயமோகன்
விலை ரூ.290 Order Now

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது. அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.

- ஜெயமோகன்
கம்பா நதி
வண்ணநிலவன்
விலை ரூ.90/- Order Now

நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவன்
விலை ரூ.70/- Order Now

இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ண-நிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்-தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன.

ஒருநாள்
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.140/- Order Now

ஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்து-கொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்-கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்-புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது.

நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்-திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணு-கிறேன். வாசகர்களில் இந்த தலைமுறை-யைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணு-வார்கள் என்று நம்புகிறேன்.

அவரவர் பாடு
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.80/- Order Now

எனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்-மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதி-னேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.

ஆட்கொல்லி
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.70/- Order Now

ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்-காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வார-வாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது-. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதி-யாவது அவர் காரணமாக வந்தவைதான். இள-வயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.

பித்தப்பூ
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.70/- Order Now

மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்-தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்-களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதா-பாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.

அவதூதர்
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.180/- Order Now

'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்ப-தாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்-பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்தி-லிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்-கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறி-வுக்கு இந்த அதிசயங் கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக் கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்து-விட்டேன்.

வாழ்ந்தவர் கெட்டால்
க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.60/- Order Now

தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’.

நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது.

மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.