மகத்தான நாவல் வரிசை

நினைவுப் பாதை
நகுலன்
விலை ரூ.190 Order Now

ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா?

இன்று
அசோகமித்திரன்
விலை ரூ.75 Order Now

மனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல.

ஆகாயத் தாமரை
அசோகமித்திரன்
விலை ரூ.140 Order Now

ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது.

- சா. கந்தசாமி
மிதவை
நாஞ்சில் நாடன்
விலை ரூ.120 Order Now

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது...

பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி...

- நாஞ்சில் நாடன்
கிருஷ்ணப் பருந்து
ஆ. மாதவன்
விலை ரூ.120 Order Now

கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டா-ரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று.

பனிமனிதன்
ஜெயமோகன்
விலை ரூ.200 Order Now

பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது.குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.

- ஜெயமோகன்
அபிதா
லா.ச. ராமாமிருதம்
விலை ரூ.90 Order Now

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் 'உண்ணாமுலையம்மன்'. இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் 'அபிதா'வாய்க் குறுகியபின், அபிதா = 'உண்ணா.'

இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில்,

அபிதா = 'ஸ்பரிசிக்காத', 'ஸ்பரிசிக்க இயலாத' என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக்கொண்டேன்.

- லா.ச.ரா.
அசுரகணம்
கா.ந. சுப்ரமண்யம்
விலை ரூ.100 Order Now

க. நா. சு. நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

இப்படைப்பில் புறநிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து, பரவி வியாபிக்கிறது.

மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.

- சி. மோகன்
நிழல்கள்
நகுலன்
விலை ரூ.50 Order Now

நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.

- சுந்தர ராமசாமி
நாய்கள்
நகுலன்
விலை ரூ.75 Order Now

ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்.

நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள். ஆனால், எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் ‘நகல்கள்’ (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.

நகுலன்
நாகம்மாள்
ஆர். ஷண்முகசுந்தரம்
விலை ரூ.120 Order Now

நான் படித்துள்ள வரையில் பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஸ்ரீ ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்க்கையைப் போலவே ஷண்முகசுந்தரத்தின் நடையும் கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது. ஒரு சிறு நாவல் இது. கதையென்று சொல்லும்படியாகப் பெரிதாக ஒன்றுமில்லை. உள்ள வரையில் வெகுமிடுக்காக, நேராக நடக்கிறது. இந்த நாவலிலே வந்து நடமாடுகிற உயிருள்ள பாத்திரங்களும், அவர்கள் பேசுகிற உயிருள்ள தமிழும்தான் முக்கியம். இந்த இரண்டிலும் ஷண்முகசுந்தரத்தினளவு தமிழ் நாவலில் வெற்றி கண்டவர்கள் வேறு யாருமில்லை என்பது என் அபிப்பிராயம்.

- க.நா.சு.
சட்டி சுட்டது
ஆர். ஷண்முகசுந்தரம்
விலை ரூ.150 Order Now

‘சட்டி சுட்டது’ உறவுகளைப் பற்றியது. பாசம் மிக்க தந்தை தன் பிள்ளைகளால் பாதிக்கப்படும் அவலத்தை நாவல் பேசுகிறது. 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மையமிட்டது நாவல். ஒவ்வொரு உறவும் தன்னிடமிருந்து விலகிப் போகும்போது மௌனமாக அதைச் சகித்து ஏற்றுக்கொள்ளும் சாமிக்கவுண்டர், இந்நாவலின் மையப் பாத்திரம்.

ஷண்முகசுந்தரம், காந்தியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்நாள் முழுக்க அக்கொள்கைகளையே பின்பற்றி வந்தவர். அவருடைய நாவல்களில் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தியதும் உண்டு. ‘சட்டி சுட்டது’ நாவல் காந்தியத்தில் ஊறிய மனம் ஒன்றின் படைப்பு வெளிப்பாடு எனக் கொள்ளத்தகும்.

- பெருமாள்முருகன்
புத்ர
லா.ச. ராமாமிருதம்
விலை ரூ.140 Order Now

இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.

நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு, நம் ரத்தத்தில் தோய்ந்து நம் மனதையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது.

- லா.ச. ராமாமிருதம்
தண்ணீர்
அசோகமித்திரன்
விலை ரூ.100 Order Now

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும்.

அசோகமித்திரன் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சி களையும் சம்பவங்களையும் பின்னிக் கதை எழுதும் படைப்பாளி, வேறு எந்த இந்திய மொழியிலாவது இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கச் சாத்தியமில்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.

இந்த பாஷையும், இந்தத் தேசமும் பெருமை கொள்ளத்தக்க இலக்கிய கர்த்தா அசோகமித்திரன்.

- வண்ணநிலவன்
சாயாவனம்
சா. கந்தசாமி
விலை ரூ.160 Order Now

‘சாயாவனம்’ ஓர் அபூர்வமான நாவல், தமிழ் படைப்பிலக்கியத்தில் ஒரு மைல்கல். நடை புதுமையானது. ஆனால் பரிசுத்தம் தோன்ற இருப்பது.

முதலில் ஒரு கதை சொல்வதுபோல் தொடங்குகிறது கந்தசாமியின் உரைநடை. காலதாமதமே செய்யாமல் வனம் அழிப்புப் பகுதி வந்தடைந்தவுடன், ரசம் மிகுந்த நீண்ட கவிதையாக உருமாறுகிறது. வனத்தை அழிப்பதை ‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போர்’ என்றும்; ஆலை நிறுவுவதை ‘பழைய காலத்தை இடித்துத் தள்ளி வரும் நவீன காலம்’ என்றும் சம்பிரதாயமாக, திரும்பத் திரும்பச் சலிப்பு தரும் உருவகங்களாகக் கந்தசாமி கொள்ளவில்லை. மாறாக, யதார்த்தத்தையொட்டி வாழ்க்கையில் யாரும் எதிர்கொள்ளக்கூடிய சம்பவங்களாக நோக்கும் ஒரு பக்குவம் அவருக்கு இருக்கிறது. இந்தப் பக்குவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செடியும் கொடியும் மரமும் விழுவதை கால மாற்றத்தின் இசையாக அனுபவிக்கும்படி எழுதப்பட்டு இருக்கிறது.

- அசோகமித்திரன்
தொலைந்து போனவர்கள்
சா. கந்தசாமி
விலை ரூ.150 Order Now

பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது.

வயது கூடக்கூட இந்த ஒருமை மாறி வேற்றுமைகளே பெரிதாகிப் போய் விடுகின்றன. மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, தீர்மானமாக, ஏற்றத் தாழ்வுகள் - வர்க்கம், வகுப்பு, உலக வாழ்க்கையில் வெற்றி அல்லது தோல்வி - இதெல்லாம் உயிருக்குயிராகப் பள்ளியில் பழகிய நண்பர்களைப் பிரித்து விடுகிறது. வெகு எளிமையானது போன்றதொரு கதையை எளிமையாகச் சொல்வதுபோலச் சொல்கிறார் சா. கந்தசாமி.

தொலைந்து போனவர்கள் இன்றைய சமூகம் மற்றும் தனி மனிதனின் இறுக்கங்களைத் தூக்கிவாரிப் போடும்படி கண் முன் நிறுத்துகிறது. பிரக்ஞையைக் கிளறும் இந்தப் படைப்பு ஒரு தலைசிறந்த தமிழ் நாவல் என்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய எதார்த்த உலகைத் துல்லியமாக உணர்த்தும் ஒளியுமாகும்.

- அசோகமித்திரன்
ப. சிங்காரம் நாவல்கள்
(கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி)
விலை ரூ.290/- Order Now

கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.

சி. மோகன்
விஷ்ணுபுரம் (நாவல்)
ஜெயமோகன்
விலை ரூ.780 Order Now

விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன்.

ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதன் புதுமையாலும் வேகத்தாலும் விஷ்ணுபுரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக இத்தனை வருடம் பேசப்பட்ட பிற படைப்புகள் குறைவே...

விஷ்ணுபுரம் இதுவரை தொடர்ந்து அச்சில் இருக்கிறது, சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஓர் அழகிய பதிப்பு வெளியாகவில்லை என்ற எண்ணம் வாசகர் மத்தியில் உண்டு. அதை இப்பதிப்பின் மூலம் நற்றிணை பதிப்பகம் சாத்தியமாக்கியிருக்கிறது.

முன்னுரையில் ஜெயமோகன்
கரைந்த நிழல்கள்
அசோகமித்திரன்
விலை ரூ.120/- Order Now

'கரைந்த நிழல்கள்' நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு ஓர் உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன்.

அசோகமித்திரன்
கடல்புரத்தில்
வண்ணநிலவன்
விலை ரூ.விலை 100/- Order Now

கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.

மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது 'அன்பு வழி' யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்.

வண்ணநிலவன்
அவன் ஆனது
சா. கந்தசாமி
விலை ரூ.170/- Order Now

'அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.

சா. கந்தசாமிக்கு முன்னுரையும் வேண்டாம்; மதிப்புரையும் வேண்டாம். அவர் பெயர் போட்டிருந்தால் உடனே அதைப் படிக்கக் கிடைத்த பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவர் மேதைமை, நேர்த்தியைத் தவிர வேறெதையும் தந்ததும் கிடையாது; ஏற்றதும் கிடையாது.

ஞானக்கூத்தன்
வாக்குமூலம்
நகுலன்
விலை ரூ.75/- Order Now

வாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்-பிராயம், - என் எல்லா நாவல்-களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்-படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும்.

பொய்த் தேவு
க.நா. சுப்ரமண்யம்
விலை ரூ.180/- Order Now

நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்-கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்-கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோ-பாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்-களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது-தான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை.

மானுடம் வெல்லும்
பிரபஞ்சன்
விலை ரூ.320/- Order Now

‘மானுடம் வெல்லும்’ எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச் --தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச்-- -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.

அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயி-கள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்-நாவலைக் குறிப்பிடுகிறார்கள்.

வானம் வசப்படும்
பிரபஞ்சன்
விலை ரூ.480/- Order Now

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது.

நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்-களிடமும் பேசு-வதற்கு நிறைய வைத்திருக்-கிறார்-கள். அவர்களின் மொழி எனக்குக் கைவந்திருக்-கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று.