கவிதைகள்

தலைமறைவுக் காலம்
யவனிகா ஸ்ரீராம்
விலை ரூ.90 Order Now

இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய ப்ரசன்னமாகவும், மனிதர்களையும் அவர் களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறேன். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கெனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச் சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஏமாற்று விளையாட்டுத்தான் எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள், சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள் மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன.

- யவனிகா ஸ்ரீராம்
அவன் எப்போது தாத்தாவானான்
விக்ரமாதித்யன்
விலை ரூ.100/- Order Now

தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது.

தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அம்மொழி, எளிமையின் அழகும் வசீகரமும் கூடியது. படைப்பு மனத்தின் ஸ்ருதி கூடிய இசை மொழியே இவருடைய கவிதை மொழி. நம்மைத் தொட்டு மீட்டக்கூடியது. மாயமாய் நம்மால் தொட்டுரணரக் கூடியது. கண்களால் கேட்கப்படும் கவிமொழி இவருடையது. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு தொகுப்பு இது.

நீர் அளைதல்
எம்.டி. முத்துக்குமாரசாமி
விலை ரூ.90/- Order Now

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.

எம்.டி. முத்துக்குமாரசாமி
ராணியென்று தன்னையறியாத ராணி
ஷங்கர்ராமசுப்ரமணியன்
விலை ரூ.50/- Order Now

ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.

தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞரான ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பு இது.

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
சி. மோகன்
விலை ரூ.90/- Order Now

என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது.

என் கவிதைகளில் விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் தனிமையின் ரீங்காரம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். தனிமை வாழ்வு எனக்கு நேர்ந்ததா அல்லது தேர்வா என்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. எனினும் அதனோடு இசைந்து அதன் எல்லா வண்ணங்களோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வண்ணங்களின் குரல்களாகவே கவிதைகள் உருக்கொள்கின்றன.

சி. மோகன்