முழுத் தொகுப்பு

சார்வாகன் கதைகள்
சார்வாகன்
விலை ரூ.400 Order Now

இப்போது, நான் எழுதியிருப்பவற்றையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது ‘அட, நான் இத்தனை எழுதியிருக்கிறேனா?’ என்ற மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி. நான் உண்மையாக ‘எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப் -போலக் குறைந்தபட்சம் நாலைந்து மடங்காவது எழுதிக் -குவித்திருக்கவேண்டும், என் கை விரல்கள் மரத்து மடங்கி-விட வில்லையே! ஆகவே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் எப்போதும் என்னை ஒரு ‘எழுத்தாள’னாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்-கொள்ளவில்லை.வானத்தில் என்றோ ஒருநாள் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் வால்நட்சத்திரம் போன்ற விசித்திரப்பிறவி என்று தான் நான் நினைத்தேன். எனவேதான் போலும், “இது என் குழந்தை!” என்று நான் மார்தட்டித் திரியவுமில்லை. அப்படித் திரியவேண்டும் என்று தோன்றவுமில்லை.

- சார்வாகன்
அழகிய பெரியவன் கதைகள்
விலை ரூ.680 Order Now

அழகியபெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக் கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உரு வாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத் திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டை யோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது. இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகியபெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத் தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகியபெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு.

- சி. மோகன்
ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயமோகன்
விலை ரூ.460 Order Now

எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச் செல்வேன். பரிசுத்தமான கடற்கரை. முந்தைய- நாள் மழைபெய்த மணற்பரப்பு. அலைநாக்கின் ஈரம் படிந்து படிந்து குமிழியிட்டு வற்றிக்கொண்டிருந்த பரப்பில் காலைச்செம்மை.

அந்த ஒளிமணற்பரப்பில் ஒரு நீண்ட தங்கச்சங்கிலி போல கிடந்த இரண்டு பாதங்களின் தடங்களைப் பார்த்தேன். யார் அது என எண்ணிய மறுகணமே என் உடல் சிலிர்த்தது, அது எனது பாதத்தடம். சில மணிநேரம்கூட அது இருக்காது. காற்றும் கடலும் சேர்ந்து அதை உண்டுவிடும். ஆனால் அதற்கு முன் கடலும் வானும் அதை பொன்னாக்கிப் பார்த்திருக்கின்றன.

இந்தக் கதைகளை இத்தொகுப்புக்காக மீண்டும் வாசிக்கையில் அப்படித்தான் உணர்கிறேன். ஓர் எளிய மனிதனின் சாதாரணத் தடங்கள்தான். ஆனால் இவை ஒருகணமேனும் பொன்னென ஒளிவிட்டிருக்கின்றன.

- ஜெயமோகன்
பூமணி சிறுகதைகள்
பூமணி
விலை ரூ.400 Order Now

எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்.

எளிய மனிதர்களாலான ஓர் உலகம் எப்படிச் சிக்கலானதாக இருக்க முடியும் என்பதை இக்கதைகளின் வழியே ஆராய்கிறார் பூமணி. விவசாயச் சமூகம் பற்றிய பொதுப் புரிதலுக்கப்பால் அதன் நுட்பமான உள்ளடுக்குகளில் பயணம் செய்யும் இக்கதைகள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் பரப்பை வெகுவாக விரிவுபடுத்துபவை. கலை அனுபவமாக வாசக மனத்தில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்குபவை.

தன் மனிதர்களிடையே புழக்கத்திலிருக்கும் சொற்களைக்கொண்டு ஒரு கலைஞனால் எந்த அளவுக்கு ஆற்றல்மிக்க பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளைத் தயக்கமின்றி உதாரணமாகச் சொல்லலாம்.

வண்ணநிலவன் சிறுகதைகள்
வண்ணநிலவன்
விலை ரூ.550 (கெட்டி அட்டை) Order Now

1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. Ôஎமிலி ஜோலாÕ எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது.

- வண்ணநிலவன்
சி. மோகன் கட்டுரைகள் (கெட்டி அட்டை)
விலை ரூ.380/- Order Now

கடந்த நாற்பது வருடங்களாக சி. மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இளம்வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் இவர்.

இவர் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி-யிருக்கின்ற போதிலும், தான் மிகவும் சிறந்தவை எனக் கருதும் கட்டுரைகளை மட்டுமே இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார்.

விமர்சகரான சி. மோகன், தன் விமர்சனத்தில் நட்பிற்கான சலுகையையோ, பகைமைக்கான விரோதத்-தையோ ஒருபோதும் காட்டுவதில்லை. படைப்பின் தகுதிதான் இவரது விமர்சனத்திற்கான முதலும் இறுதியுமான அளவுகோல். அவ்வகையில் இவர் தமிழின் தலைசிறந்த விமர்சகர் ஆகிறார்.

தான் கற்றுத் தேர்ந்ததில் நூறில் ஒரு பங்கையே படைத்திருக்கும் சி. மோகனின் இக்கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது வெளிப்படும் தீட்சண் யத்தையும் ஒரு மகத்தான மனம் ஓரிடத்தில்கூடத் தேங்கிவிடாமல் இலக்-கியத்தின் ஊடாக இடையறாது பயணித்துக் கொண்டிருப்பதையும் நாம் உணரலாம்.

கோபிகிருஷ்ணன் படைப்புகள் (கெட்டி அட்டை)
விலை ரூ.800/- Order Now

கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.

ஒரு சாதாரண, விசேஷ சமூக முக்கியத்துவம் பெறாத, சிந்திக்கக் கூடிய மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக் கூடியது அலுப்புதான். உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மனப்பான்மை இத்துடன் கூடவே ஒரு அலுப்பும் விலகாத புகை மூட்ட-மாக இருக்கும்.

ஒரு சாதாரண மனிதன் இந்த அலுப்பைத் தனக்குப் பொருத்தமான அல்லது பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தவிர்க்க முயலுகிறான்.

இந்த அலுப்பை மனதார ஒப்புக்கொண்டு எழுத்தில் பதிவுசெய்வதுதான் கோபிகிருஷ்ணனின் படைப்புகள். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திட மனிதன் என்பதையே காட்டுகிறது.