கிளாசிக் கட்டுரை நூல் வரிசை

சங்கச்சித்திரங்கள்
ஜெயமோகன்
விலை ரூ.200 Order Now

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது ...எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம் ...!

- ஜெயமோகன்
காலக்கண்ணாடி
அசோகமித்திரன்
விலை ரூ.220 Order Now

‘கணையாழி’ பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு ‘காலக்கண்ணாடி.’ ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை இவை. இத்தொகுப்பில் சில இடங்களில் காணப்படும் ஒரு&வரி அறிவிப்புகள், சில பிரசுரங்களின் முகவரி மற்றும் விலை பற்றிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தைத் தகவல்பூர்வமாக விளக்கக்கூடும் எனச் சேர்க்கப்பட்டவை. என் சிறுகதை, நாவல் முதலியனவும் இத்தகைய முயற்சிகள்தான். என் வரையில் எல்லாமே நான் எழுதிவரும் முடிவுறாத ஒரு நீண்ட படைப்பின் பகுதிகளாகவே தோன்றுகின்றன.

- அசோகமித்திரன்
பார்வைகள்
அசோகமித்திரன்
விலை ரூ.170 Order Now

முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே அவனுடைய கட்டுரைகள் அமைவதாக எனக்குத் தோன்றுகிறது.

உயர்ந்த மதிப்பீடுகளை நாடுபவர்களுக்கு உயர்ந்த கலையும் வசப்படும். இக்கட்டுரைகள் எல்லாமே நல்ல மதிப்பீடுகளை நாடிய படைப்பாளிகள் பற்றியவை. தமிழின் இன்றைய இலக்கிய மேன்மைக்கு இவர்களின் பங்கு கணிசமானது.

- அசோகமித்திரன்
என் பயணம்
அசோகமித்திரன்
விலை ரூ.140 Order Now

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது.

இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்துப் பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

- அசோகமித்திரன்